எத்தனோல் விலை உயர்வால் எதிர்வரும் நாட்களில் மதுபானத்தின் விலை மீண்டும் உயரலாம் என தெரிவிக்கப்படுகின்றது.பெல்வத்தை சீனி நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் எத்தனோல் லீற்றர் ஒன்றின் விலை நேற்று (17) முதல் 700 ரூபாவிலிருந்து 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஹங்வெல்லவில் உள்ள எத்தனோல் உற்பத்தி நிறுவனமும் தனது உற்பத்தி விலைகளை அதிகரித்துள்ளது.
இயந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலை உயர்வினால் எத்தனால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.