கண்டி மற்றும் கண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மதுபானசாலைகளை 10 நாட்களுக்கு மூடவுள்ளதாக கலால் தீர்வை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டி தலதா மாளிகையில் இடம்பெறவிருக்கும் பெரஹராவை முன்னிட்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 8ஆம் திகதியில் இருந்து ஆகஸ்ட் 18ஆம் திகதி வரையிலேயே மதுபானசாலைகள் மூடப்பட உள்ளன.
இந்த காலக்கட்டத்தின் போது சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை கொள்வனவு செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலால் தீர்வை திணைக்களம் அறிவித்துள்ளது.