மதுபான அனுமதிபத்திரம் வைத்திருப்பவர்களுக்கு விசேட அறிவிப்பு

0
77

அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மதுபான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு தேவையான அனுமதி சான்றிதழ்களை விண்ணப்பிப்பது தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கு வருமான வரி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்,மேலும் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளுக்கு பணம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிகள் தேவைக்கேற்ப செலுத்தப்பட்டிருக்க வேண்டும்,மற்ற வரிகளுக்கு பதிவு செய்தால், அது தொடர்பான அறிக்கைகள் கொடுக்கப்பட்டு செலுத்தப்பட வேண்டும்.

வரி செலுத்தப்படாவிட்டால் அதற்கான காரணங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்,அது தொடர்பான அனுமதி சான்றிதழ் நேரடியாக கலால் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here