மதுபோதையில் வாகனம் செலுத்துவோர் மீது பாயும் சட்டம் வரவேற்கத்தக்கது; அமைச்சர் செந்தில் வரவேற்பு!

0
119

தற்போது இலங்கை அரசாங்கத்தினால் நாட்டுமக்களின் நலன் கருதி குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக ரூபா.25,000.00 அறவிடப்பட வேண்டும் என கொண்டுவரப்பட்ட சட்டமானது வரவேற்கத்தக்க விடயம் என ஊவா மாகாண அமைச்சர் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவ்வறிக்கையில், தற்போது அதிகரித்து வருகின்ற வாகன நெரிசலின் காரணமாக பல விபத்துக்களை அன்றாடம் எதிர்நோக்க வேண்டி வருகின்றது. இவ்வாறான விபத்துக்களுக்கு பிரதான காரணமாக அமைவது, செல்லுபடியாகும் வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் இல்லாது வாகனங்களை செலுத்தல், வாகன சாரதி அனுமதிபத்திரம் இன்றி வாகனம் செலுத்தல், காப்புறுதி இன்றி வாகனம் செலுத்தல், முறையாக வீதி சமிக்ஞைகளை கடைப்பிடிக்காது வாகங்களை செலுத்தல் மற்றும் குடி போதையில் வாகனம் செலுத்தல் போன்றன முக்கிய காரணங்களாக அமைகின்றது. இதனை கருத்திற்கொண்டு அரசாங்கம் இவ்விபத்துக்களை குறைக்கும் முகமாக இவ்வாறான செயல்களில் ஈடுப்படுவோருக்கு எதிராக ரூபா.25,000 தண்டப்பணம் அறவிடுமாறு அமுல்படுத்தியுள்;ள சட்டமானது வரவேற்கத்தக்கது.

இதன் மூலம் அதிகளவிலான விபத்துக்களை குறைக்க முடியும் என நம்புகின்றேன்.
இருப்பினும், குடி போதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு தற்போது அறவிடப்பட்டுள்ள இத்தண்டப்பணம் போதாது என்பது எனது கருத்தாகும். காரணம் இவ்வாறு குடி போதையில் வாகனம் செலுத்துவதன் காரணமாக வாகனத்தில் பயணிக்கும் பயணிகள் மட்டுமின்றி வீதியில் செல்லும் பாதசாரிகளும் விபத்துக்குள்ளாகி கால் கைகள் உடைந்து வாழ் நாள் முழுவதும் அங்கவீனமாக கஷ்டப்பட வேண்டிய நிலை மட்டுமின்றி சிலர் மரணிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஆகவே, இவ்விருபத்தைந்து ஆயிரம் ரூபா என்பது இதற்கு ஈடு கிடையாது. அவர்களின் சந்தோஷத்திற்காகவும் பொழுபோக்கிற்காகவும் குடிப்போதையில் ஈடுப்படுவது மற்றவர்களுக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்துகின்றது என்பதினை அவர்கள் விளங்கிக்கொள்வது கிடையாது. ஆகவே, இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை கைதுச்செய்து சிறையில்; வைப்பது மற்றுமின்றி நிரந்தரமாக அவர்களின் சாரதி அனுமதி பத்திரம் இரத்துச்செய்யப்பட்டு மேலும் ஐந்து வருடங்களுக்கு சாரதி அனுமதி ப்திரத்திற்காக விண்ணப்பிக்க முடியாத அளவிற்கு கடுமையான சட்டத்தினை அமுல்படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்தால் மட்டுமே இவ்வாறு குடிப்போதையில் வாகனம் செலுத்துபவர்கள் மனதில் ஒரு அச்சம் பயம் ஏற்பட்டு எதிர்வரும் காலங்களில் குடிப்போதையுடன் வாகனங்களை செலுத்த அச்சுவார்கள். இதன் மூலம் விபத்துக்கள் ஏற்படும் அளவினை கட்டுப்படுத்த முடியும்.

மேலும், கடந்த காலங்களில் இவ்வாறு குடிப்போதையில் வாகனம் செலுத்துபவர்கள், வாகன சாரதி அனுமதி பத்திரம் இல்லாது வாகனம் செலுத்துபவர்கள் மற்றும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக ரூபா.5000 தண்டப்பணம் மற்றும் மூன்று மாதக்காலத்திற்கு சாரதி அனுமதி பத்திரம் இரத்துச்செய்தல் போன்ற சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டிருந்த போதிலும் வாகன விபத்துக்கள் குறைவதற்கு மாறாக நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்பட்டு வந்தது. அதனை கருதியே அரசாங்கம் தற்போது அச்சட்டம் தொடர்பாக மீளாய்வு செய்து தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ரூபா.25,000.00 தண்டப்பணம் அறவிடப்படவேண்டும் எனும் இச்சட்டம் வரவேற்கத்தக்கது. வாகனங்கள் அதிகரிக்க அதிகரிக்க வாகனம் செலுத்தும் சாரதிகளின் அலட்சிய போக்கின் காரணமாக விபத்துக்கள் மற்றும் பொது மக்களின் உயிரிழப்புக்களும் அதிகரிக்கும் இச்சூழ்நிலையில் இவ்வாறான சட்டங்கள் அமுல்படுத்துவதன் மூலம் விபத்துக்கள் மற்றும் அப்பாவி பொது மக்களின் உயிரிழப்புக்களை தவிர்க்க முடியும் என அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சின் ஊடகப்பிரிவு
எஸ். பிரபாகர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here