மது போதையில் பெண்களிடம் தவறாக செயற்பட்ட பிரபல கால்பந்து வீரர் (காணொளி)

0
42

இங்கிலாந்து அணியின் கால் பந்து வீரர் கைல் வாக்கர் மது போதையில் பெண்களை ஆத்திரமூட்டும் வகையில் மோசமாக நடனமாடிய சீசீடீவி காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து வீரரான கைல் வாக்கர் என்பவர், கடந்த மார்ச் 5 ஆம் திகதி அளவுக்கு அதிகமான குடிபோதையில் இந்த செயலை செய்துள்ளார்.

மான்செஸ்டரிலுள்ள ஒரு பாரில் தனது தோழிகளோடு வந்த கைல் வாக்கர் சுமார் 90 நிமிடம் பாரில் சுற்றி அங்கிருந்த பெண்களோடு போதையில் மோசமாக நடனமாடியுள்ளார்.

மேலும் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சில சேட்டைகளைச் செய்துள்ளார். இந்த காணொளி காட்சிகள் காவல் துறைக்கு கிடைத்துள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொண்டதற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படலாம் எனத் தெரியவந்துள்ளது.

பெண்களைச் சீண்டும் வகையில் அவர் செய்த செயல்கள் காணொளியில் பதிவாகியுள்ளதால் 2003 துஷ்பிரயோக சட்டத்தின் படி அவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.இங்கிலாந்து நாட்டின் மென் சிட்டி அணியின் புகழ்பெற்ற கால்பந்து வீரரான இவருக்கு அன்னி கில்னர் என்ற மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/intent/follow?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1633491171677749249%7Ctwgr%5E95aa9c3d74f5360f14211a7fff295377da596320%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fibctamil.com%2Farticle%2Fengland-best-football-player-arrest-drunk-dirty-1678290920&screen_name=FutballNews_

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here