மத்தள விமான நிலையம் உட்பட 7 அரச நிறுவனங்கள் விற்பனைக்கு ; அரசு தீர்மானம்!

0
94

7 அரச நிறுவனங்களை விற்பதற்கு அரசு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தள ராஜபக்ஸ விமானநிலையம் உள்ளிட்ட 7 நிறுவனங்கள் ஒன்றாக விற்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்தள விமானநிலையம்,ஹில்டன் ஹோட்டல்,லங்கா ஹொஸ்பிட்டல்,ஹயிட் ரிஜின்சி ஹோட்டல்,போன்ற நட்டத்தில் இயங்கிவரும் அரச நிறுவனங்களும் இதில் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மத்தள விமான நிலையத்தை விற்பதற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 12ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

அத்துடன் மத்தள விமான நிலையத்தை வருடத்திற்கு 10 இலட்ச பயணிகள் பயன்படுத்துவதற்கான வசதிகள் காணப்பட்டும், நாளொன்றிற்கு இரண்டு விமானங்களே இங்கு தரையிறங்குவதாகவும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here