மத்தியமலை நாட்டில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை கடும் காற்று பல வீடுகள் சேதம்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சீரற்ற காலநிலை நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்தும் நிலவி வருகிறது.

அடை மழையுடன் கடும் காற்றும் வீசி வருகிறது இரவு வேளையில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகின்றன. ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா பட்டல்கலை மேல் பிரிவு தோட்டத்தில் நேற்று மாலை வீசி கடும் காற்று காரணமாக குறித்த தோட்டத்தில் அமைந்து 16 வீடுகளை கொண்ட தொழிலாளர்களின் தொடர்குடியிருப்பின் கூரை தகரங்கள் காற்றினால் அல்லுண்டு சென்றுள்ளன

இதனால் இக்குடியிருப்பில் வாழ்ந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
குறித்த கூரையினை தோட்ட நிர்வாகம் மற்றும் பொது மக்கள் இணைந்து சரிசெய்துள்ளனர். இதே வேளை தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காணரமகா பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுளளன. விமல சுரேந்திர, கெனியோன், மேல்கொத்மலை ஆகிய நீர்த்தேக்களின் வான்தவுகள் அடிக்கடி திறக்கப்படுவதனால் இந்த நீர்த்தேக்கத்தின் கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு மின்சார துறை பொறியியலாளர்கள் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

காசல் ரி நீர்த்தேக்கத்தில் அமெரிக்க தொழிநுட்பத்தில் நீர்மானிக்கப்பட்ட பலூன் முறை கதவுகளின் மேல் வான் பாய்வதற்கு இன்னும் ஒரு அடி மாத்திரமே இருக்கின்றன குறிப்பிடத்தக்கது.

மலைவாஞ்ஞன்