மத்தியமாகாணத்தில் ஆசிரிய உதவியாளர்கள் பயிற்சி காலத்தை நிறைவு செய்து இன்னும் ஆசிரிய சேவைக்கு உள்வாங்கப்படாமல் 141 பேர்காணப்படுகின்றனர்.அவர்களை விரைவில் உள்வாங்கப்பட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முன்வர வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் பத்தாயிரம் சம்பளத்தொகையில் ஆசிரிய உதவியாளர்களாக பலர் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.அதில் பலர் பயிற்சியை நிறைவு செய்து ஆசிரிய சேவைக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.ஆனால் இன்னும் மத்திய மாகாணத்தில் பயிற்சியை நிறைவு செய்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கடந்தும் 141 ஆசிரிய உதவியாளர்கள் ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கப்படாமல் காணப்படுகின்றனர்.எனவே அவர்களுக்கான தீர்வை இவ்வரசாங்கம் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இப்போதைய சூழ்நிலையில் நாட்டில் பத்தாயிரம் சம்பளத்தை வைத்து வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாது. ஆனால் இவர்கள் இன்னும் பத்தாயிரம் ரூபாய்க்கு வேலை செய்து வருகின்றமை வேதனையான விடயம்.இது தொடர்பில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துறையாடினேன்.அதேபோல கல்வி அமைச்சரிடமும் பாராளுமன்ற கல்வி மேற்பார்வை குழுவிடமும் கலந்துரையாடியுள்ளேன்.விரைவில் அவர்களுக்கான நிரந்த தீர்வு கிடைக்கும்.அதேபோல நுவரெலியா மாவட்டத்தில் அரசாங்காத்தோடு இணைந்துள்ள கட்சிகள் இவர்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டுமென நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேலுசாமி ராதாகிருஸ்ணன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.