மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு பணிக்காக சென்ற இலங்கை பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

0
139

மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு பணிக்காக சென்ற இலங்கை பெண் ஒருவர் கண்களை இழந்த நிலையில் நாடு திரும்பியுள்ளார்.

குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த ஞானவத்தி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவரே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளார்.

குடும்ப வறுமை காரணமாக 2000ஆம் ஆண்டு குருணாகலிலுள்ள வெளிநாட்டு முகவர் உதவியுடன் அவர் சவுதிக்கு சென்றுள்ளார்.

கடந்த 18 வருடங்கள் வெளிநாட்டில் பணி செய்தவர் வெறுமையாகவே நாடு திரும்பியுள்ளார்.

இரண்டு மூன்று வீடுகளில் பணி செய்தும் பணம் இன்றி அவர் இலங்கை திரும்பியுள்ளார்.

குறித்த பெண் பணி செய்த வீட்டில் அவரை கடுமையாக தாக்கிய காரணத்தினால் அவரால் எழுந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் சவுதியில் உள்ளவர்கள் முகத்திலேயே தாக்குதல் மேற்கொள்வதனால் அவரது பார்வையும் பறிபோயுள்ளது.

ஒன்றரை வருடங்களாக தங்கள் தாய் தொடர்பில் தகவல் கிடைக்காமையினால் பிள்ளைகள் தேட ஆரம்பித்துள்ளனர். இறுதியில் தாய் கிடைத்த போதிலும், அவரால் எழுந்து நடக்கவும் முடியாதும், கண்களும் தெரியாதென தெரியவந்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here