ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான தாக்குதல்களால் மத்திய கிழக்கு வழியான விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
ஈரான் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல் மற்றும் ஈரானின் பதில் தாக்குதல், தீவிர போராக உருமாறும் வாய்ப்பு இருப்பதாக உலக நாடுகள் அச்சம் வெளியிட்டு உள்ளன.
ஈரான் மீதான இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு இரு நாடுகளும் விரைவில் போர் நிறுத்தம் செய்யுமாறும் வலியுறுத்தி உள்ளன .
இரு நாடுகளுக்கு இடையேயான இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு வழியான விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இரு நாடுகளும் தங்கள் வான்பகுதியை மூடியுள்ள நிலையில் சர்வதேச நாடுகளின் விமானங்கள் அந்த வழியான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன.