மத்திய மலைநாட்டில் கடந்த சில மாதங்களாக வறட்சியான காலநிலை நிலவியது. இதனால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் என்றும் இல்லாத அளவு குறைவடைந்தன. சில பிரதேசங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டன. நீர் மின் உற்பத்தியும் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஹட்டன் , கொட்டகலை , கினிகத்தேனை பொகவந்தலாவை உள்ளிட்ட பிரதேசங்களிற்கும் நீர்ப்போசண பிரதேசங்களிற்கும் மழை பெய்துவருகின்றது.
கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சுமார் 7.00 அங்குலம் வரை உயர்வடைந்து இருப்பதாகவும் மழைவீழ்ச்சி எதிர்வரும் காலங்களில் அதிகரிக்குமேயானால் நீர்மட்டம் மேலும் உயர்வடையக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மின்உற்பத்தி நடவடிக்கைகளும் அதிகரிக்கக் கூடும் எனவும் இதனால் மின்துண்டிப்பு குறைவடையலாம் என மின்சாரசபை பொறியியலாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்
இதேநேரம் கடந்த காலங்களில் நீரின்றி மின்னுற்பத்தியினை இடைநிறுத்தப்பட்ட சிறு மின்னுற்பத்தி நிலையங்களில் மின்னுற்பத்தி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மலைவாஞ்ஞன்