மத்திய மலை நாட்டில் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பலத்த காற்று வீசுகிறது. இந்த காற்று காரணமாக பல வீடுகளின் கூரைத் தகடுகள் மற்றும் தகரங்கள் காற்றினால் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன. இதனால் பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன.பலத்த காற்று வீசி வருவதனால் பல இடங்களில் மரக்கிளைகள் மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்து அட்டனில் பல பிரதேசங்களுக்கு 2018.06.09 அன்று நள்ளிரலு முதல் மின்சாரம் தடைப்பட்டுள்ளன.
ஒரு சில பிரதேசங்களுக்கு மின் 2018.06.09 அன்று அதிகாலை வேளையில் வழமைக்கு திரும்பிய போதிலும், ஏனைய சில பகுதிகளுக்கு இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அடிக்கடி மழையுடன் பலத்த காற்று வீசி வருவதனால் மண்சரிவு அபாயப்பகுதிகளில் வாழ்பவர்களும், மரங்களுக்கு அருகாமையில் வசிப்பவர்களும் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
(க.கிஷாந்தன்)