சிறிது காலமானாலும்,மத்திய மாகாண தமிழ் கல்வியமைச்சை மீண்டும் பெற வேண்டும் என்பதில் ரமேஷ் உள்ளிட்ட அவரின் தலையாட்டிகளுக்கு ஒரு கனவாகவே இருந்து வந்துள்ளது.தலையாட்டி பொம்மையாக இருந்த முன்னாள் மாகாண அமைச்சர் அனுஷா சிவராஜின் செயற்பாடுகள் பலரின் கேலிக்கும்,விமர்சனத்துக்கும் உள்ளாகியிருந்த வேளை ராமின் செயற்பாடுகள் சற்று நம்பிக்கை தருவதாக இருந்த போதும்,பிலிப்பினதும் ,சாந்தகுமாரினதும் அதீத தலையீடுகள் ராமை சுயமாக செயற்படவில்லை.அதே நேரம் ராம் ஆறுமுகத்தின் கட்டுபாட்டுகளை மீறி செயற்படுவதாக கைதடிகள் ஓத ராமின் பதவி பறிக்கப்பட்டு இன்னொரு கூஜாவான ரமேஷிற்கு கொடுக்கப்பட்டது.
”செவப்பாயிருக்கவன் பொய்சொல்ல மாட்டான்” என்றது போல “இங்கிலீஷ் பேசுறவனெல்லாம் படித்தவன்” என்ற ரீதியில் ஆறுமுகத்தாரும் மெத்த படித்தவர்தான்.
ஆகவே தான் தன்னை மீறி செய்ற்பட முடியாத வகையில் மாட்டு பட்டியை பார்த்துக்கொண்டவருக்கும்,தேநீர் போட்டுக்கொடுப்பவருக்கும்,மத்திய மாகாணத்தில் அமைச்சு பதவியை கொடுத்திருப்பாரா.அமைச்சு பதவியை ஒருவருக்கு ஆறுமுகம் தீர்மானிக்கிறார் என்றால் அதில் சில அம்சங்கள் அடங்கியிருக்கும்.
தனது செலவுகளையும்,கட்சி செலவுகளையும் ஈடுகட்டுபவராக இருக்க வேண்டும்.பிற கவனிப்புகளையும் பார்த்துக்கொள்ளவேண்டும்
அமைச்சில் அமைச்சரின் உதவியாளராக யாரை சேர்ப்பது யாரை விலக்குவது என்பதை ஆறுமுகமே தீர்மானிப்பார்.
சொல்லுகின்ற நேரத்தில் அமைச்சு பதவியை விட்டு விலகவேண்டும்.
இந்த அடிப்படையில் தான் இ.தொ.காவில் பதவிகள் வழங்கப்படும். இல்லையெனில் மிக நீண்டகாலமாக ஆறுமுகத்தோடு இருக்கும், அவரின் ஆரம்ப கட்ட செயற்பாடுகளுக்கு உடனிருந்து கவனித்துக்கொண்ட சத்திக்கு ஏன் அமைச்சு பதவி வழங்கப்படவில்லை? ஒரு ஆசிரியராகவிருந்த கணகராஜிற்கு ஏன் வழங்கப்படவில்லை.அது விமர்சனத்துக்கு உள்ளான ஒன்று
இருந்த போதும் தனக்கு கிடைத்த அமைச்சு பதவிதான் தனக்கும்,இதொகாவுக்கும் இறுதியானது என்பதனை ரமேஷ் மிக நன்றாகவே இனங்கண்டுள்ளார்.விவசாய அமைச்சை வைத்துக்கொண்டு கால் நடையையும்,மீண்வளர்ப்பையும்,மண்வெட்டிகளையும் மட்டும் நம்பி பிழைப்பு நட்த்த முடியாது என்பதனை கண்டு தான் ஒருவருட காலத்துக்காவது தமிழ் கல்வியமைச்சை மன்றாடி பெற்றுள்ளனர்.
இவ்வமைச்சை பெற்றதன் பின்னணி யாதெனில் அமைச்சரவையை மாற்றியமைக்கும் போது ஆறுமுகத்தாருக்கு ஒரு அமைச்சு கிடைக்கபோகிறது என திடமாக நம்பி வரவேற்புக்கான ஏற்பாடுகளை எல்லாம் தடபுடலாக ஒழுங்கமைத்து பட்டாசு முதற்கொண்டு எல்லா ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.ஆனால் கடைசியில் எல்லாக்கனவும் சரிந்து விடவே எங்களுக்கு பேரம் பேசும் சக்தியில்லாத அரசில் அமைச்சு பதவி தேவையில்லை.மாகாணத்தில் கல்வியபிவிருத்தியை காலங்காலமாக நாங்களே செய்து வருகின்றோம்.ஆகவேதான் தமிழ் கல்வியமைச்சை கேட்டு பெற்றுக்கொண்டோம் என வீர வசனம் பேசினர்.ஆனால் தமிழ் கல்வியமைச்சையாவது கொடுங்கள் என முதலமைச்சரிடமும்,ஜனாதிபதியிடமும் கெஞ்சி கூத்தாடியது பலருக்கும் தெரியும்.
கல்வியமைச்சை கொடுத்தது தவறு என்று நாம் சொல்லவில்லை.கல்வி சட்டங்களும் நிர்வாக கட்டமைப்பும் தெரியாத ரமேஷ் கல்வி அதிகாரிகளையும்,ஆசிரியர்களையும் ஆட்டுவிக்க முயல்வது தான் தவறானது.அவரின் கத்துக்குட்டி தனத்தாலும் அவரி உதவியாளர்கள் என சொல்லிக்கொள்ளும் சிலரின் அடாவடித்தன்ங்களாலும் சிக்கி சீரழிவது உதவிசெயலாளர் சத்தியேந்திராவும்,மேலதிக மாகாண பணிப்பாளர்சதீஷும் தான். தனக்கு வேண்டிய ஆசிரியர்களுக்கு பதவியுயர்வு கொடுக்கச்சொல்வதும்,இடமாற்றங்களை ரத்துசெய்யசொல்வதும்,தனக்கு வேண்டாத அதிபர் களை முறையற்று இடமாற்றம் செய்வதும் தனக்கு தேவையான அதிபர்கள் 25 வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையிலிருந்தாலும் அவர்களை இடமாற்றம் செய்யாமலும் என பல சித்து வேலைகளை காட்டி வருகிறார்.மலையக ஆசிரியர்கள் பெட்டிப்பாம்பாக அடங்கி இவரின் மகுடிக்கு ஆடுபவர்கள் என இவர் எண்ணுகிறார்.பொதுவாகவே இதொகா வின் நிலைப்பாடு இது தான்.பெட்டிப்பாம்பாக அல்ல அதற்கு அப்பாலும் சென்று சில ஆசிரியர்கள் இவர்களுக்கு சேவகம் செய்வதால் தான் ரமேஷ் போன்றவர்கள் கற்ற சமூகத்தை டக்கியாள எண்ணுகிறார்கள்.
கல்வி இராஜாங்க அமைச்சின் மூலமாக உதவி ஆசிரியர்கள் 42 பேருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பதாக ஆசிரியர் நியமனம் கொழும்பில் வைத்து வழங்கப்பட்டது.இவர்களுக்கு பாடசாலையை ஒதுக்கி தரவேண்டியது மத்திய மாகாண கல்வியமைச்சின் கடமையாகும்.ஆனால் அவர்களுக்கான பாடசாலை குறிப்பிட்ட நியமன கடிதங்களை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து இரண்டு மாதங்களுக்குப்பின் கடந்த 07.09.2017 அன்று நுவரெலியா பரிசுத்த்திரித்துவ கல்லூரியில் வைத்து அவசர அவசர மாக பாடசாலை குறிப்பிட்ட நியமன கடிதங்களை வழங்கி வைத்துள்ளனர்.ஏனெனில் மாகாண தமிழ் கல்வியமைச்சர் ராமேஷ்வரனின் தலைமையில் மாகாண கலாசாரவிழாவினை கொண்டாடுவதற்கான கலந்துரையாடல் ஒன்றினை அங்கே திடீர் என்று ஒழுங்கு செய்துள்ளனர்.கோட்டகல்வி காரியாலயத்தில் ஒழுங்கு செய்வதாக கூறிய இந்நிகழ்வை திடீரென்று பாடசாலை பிரதான மண்டபத்திற்கு மாற்றியுள்ளனர்.கல்வி இராஜாங்க அமைச்சினூடாக பாடசாலைக்கு புதிய கட்டிடம் அமைப்பதாக்கூறி ஏற்கன்வே இருந்த மண்டபம் உடைக்கப்பட்டுவிட்ட நிலையில் இடப்பற்றாக்குறை காரணமாக பெருந்தொகையான மாணவர்களுக்கு பிரதான மண்டபத்திலேயே வகுப்புகள் ஏற்ப்டுத்திக்கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாணாக்கர்களை அவசரமாக வெளியேற்றி அமச்சரின் பரிவாரங்களுக்கு இடமளித்துள்ளனர்.
இக்கலந்துரையாடலை பெறுமதிமிக்கதாக காட்டுவதற்கும்,ஆசிரிய நியமனங்களை தாமேவழங்கியதாக காட்டுவதற்காகவும் இந்நிகழ்வு சேர்க்கப்பட்டுள்ளது.அவசர அவசரமாக சத்தியேந்திரா கையில் கிடைத்த நியமனகடிதங்களை எடுத்துக்கொண்டு ஓடி வந்திருக்கிறார்,முறையாக யாருக்கும் அறிவிக்கப்படவுமில்லை ஓரிருவருக்கு தொலைபேசி மூலமாக சொல்லியிருக்கின்றனர்,செவிவழி செய்தியாக கேள்வி பட்டவர்கள் அலறிஅடித்துக்கொண்டு ஓடியிருக்கின்றனர்.மாகாண உதவி செயலாளர் சத்தியேந்திராவும்,மேலதிக பணிப்பாளர் சதீஷும் யாருடைய நிகழ்ச்சி நிரலுக்காக வேலை செய்கிறார்கள்.அள்ளிதெளித்த கோலமாக இந்நியமனத்தை ஏன் வழங்கினார்கள் எனப்து ஒன்றும் புரியாத புதிர் அல்ல.
( இந்த ஆக்கம் கட்டுரையாளனுக்கே உரித்தானது கருடனுக்கு அல்ல)
மலைக்கள்ளன்