மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் அனுப்பபடுகின்ற சுற்று நிருபங்கள் மற்றும் கடிதங்கள் சிங்கள மொழியில் அனுப்பி வைக்கபடுகின்றமை தொடர்பாக மாகாண கல்வி பணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளளேன்.எனகிறார் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன்.
. கல்வி அமைச்சினால் தமிழ் பாடசாலைகளுக்க அனுப்பபடுகின்ற சுற்று நிருபங்கள் மற்றும் கடிதங்கள் தமிழ் பாடசாலைகளுக்கு அனுப்பபடுகின்றபோது சிங்கள மொழியில் அனுப்பி வைக்கபடுவதாக ஆசிரியர்களும் அதிபர்களும் குற்றம் சுமத்துவதாகவும் இவ்விடயம் தொடர்பாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் ஏக்கநாயக்க அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் அனுப்பபடுகின்ற சுற்று நிருபங்களை தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்து குறித்த வலயங்களுக்கு பொறுப்பான வலயகல்வி பணிப்பாளர்கள் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கபட வேண்டும் என இதற்கான முக்கிய பொறுப்ப வலயகல்வி பணிப்பாளருக்கு இருப்பதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் ஏக்கநாயக்க மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ. ஸ்ரீதரனிடம் சுற்றிகாட்டினார்.
இந்த பிரச்சினைகள் இவ்வாறு இருக்கின்ற போதிலும் ஹட்டன் வலயக்கல்வி பணிப்பாளரினால் பாடசாலைக்கு அனுப்பப்படுகின்ற கடிதங்கள் அனைத்தும் சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட முத்திரைகளையே குறித்த கடிதத்தில் அச்சிடப்பட்டு அனுப்பபடுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
குறித்த சுற்று நிருபங்களும் கடிதங்களும் சிங்கள மொழியில் தமிழ் பாடசாலைகளுக்கு அனுப்பபடுவதால் பாடசாலையில் உள்ள அதிபர் உபஅதிபர் ஆசிரியர்கள் வாசித்து விளங்கி கொள்ள முடியாது நிலை காணப்படுவதாகும் தெரிவித்தார்.
எனவே கல்வி திணைக்களத்தில் இருந்து கல்விய வலயங்களுக்கு சிங்கள மொழியில் அனுப்பபடுகின்ற கடிதங்களை வலயத்திற்கு பொறுப்பான பணிப்பாளர் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு குறித்த பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் என்பதனை மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ. ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொகவந்தலாவ நிருபர்
சதீஸ்