மத்திய மாகாண தமிழ் சாகித்ய விழா கோலாகலமாக ஆரம்பம் ! ( photos)

0
151

“அறிவு பெருக்கி ஆற்றல் மிகுவோம்” என்ற தொனிப்பொருளில் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா நுவரெலியா மாநகரில் 07.10.2017 அன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.

IMG_9907IMG_9931

இவ்விழா நுவரெலியா பழைய கடை வீதி முற்றத்திலிருந்து ஊர்வலமாக ஆரம்பிக்கப்பட்டது.

இதில் மத்திய மாகாண ஆளுநர் மற்றும் அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர், அரச முக்கியஸ்தர்கள் கல்வி அதிகாரிகள், எனப் பலர் கலந்து கொண்டனர்.

IMG_9967IMG_9968

இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த சாகித்ய விழா மத்திய மாகாண விவசாய மற்றும் இந்து கலாசார, தமிழ் கல்வி அமைச்சர் ரமேஷ் தலைமையில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் பெரியசாமி சந்திரசேகரன், சு.திருச்செந்தூரன் மற்றும் திருமதி.சந்திரகுமாரி கணபதி, முருகேசு சுவாமிகள் ஆகியோரின் பெயரில் அரங்குகளும் மற்றும் துறைசார்ந்தோர் கௌரவிப்பு மற்றும் விருது வழங்கல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

(க.கிஷாந்தன், டி.சந்ரூ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here