ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இந்த வாரத்தில் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. அர்ஜூன் மகேந்திரனின் பதவிக் காலம் இந்த மாத இறுதியுடன் பூர்த்தியாகவுள்ளது.
பதவிக் காலத்தை நீடிக்கக் கூடாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் மோசடி இடம்பெற்றதாகவும் உட்சந்தை தகவல்கள் கசிய விடப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் மத்திய வங்கியின் ஆளுனருடன் ஜனாதிபதி இந்த வாரம் கதவு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.