மத்திய வங்கியின் புதிய ஆளுநராக டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதேவேளை அனைத்து கட்சிகளினதும் ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.