விசாரணைகள் நிறைவடையும் வரையில் மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜூன் மகேந்திரனை நியமிக்க போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பிரதமர் உறுதிமொழி வழங்கியுள்ளதாக பிரஜைகள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
பிரஜைகள் சக்தி அமைப்பினருக்கும், பிரதமருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, அண்மையில் அதிகரிக்கப்பட்ட வட் வரி தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.