இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது சேவையை விரிவுப்படுத்தும் நோக்கதோடு கிளை காரியாலயம் ஒன்றை நேற்று (08.03.2022) செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு நுவரெலியா குயின் எலிசபெத் வீதியிலுள்ள எலிசபெத் கட்டிடத்தில் மூன்றாம் மாடியில் இலங்கைக்காகன தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகர் எஸ். ஈ. ஸ்கொக்கினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ் வைபவத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான ரோஹிணி மாரசிங்க , இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களான சங்கைக்குரிய கலுபஹன பியரத்தன ஹிமி, கலாநிதி. விஜித நானயக்கார, வைத்தியர். நிமல் கருணாசிறி மற்றும் செல்வி. அனுஷியா சண்முகநாதன் ஆகியோருடன் ஆணைக்குழுவின் அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.
டி சந்ரு