ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கு இடையில் விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை செயலகத்தில் இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலென்னே தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை மனித உரிமைகள் ஆணையாளரால் நேற்று சமர்ப்பிக்கபடவிருந்த நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.