இனவாதம், மதவாதம், மோதல் அற்ற நிலையான தேர்தலுக்காக முன் நிற்குமாறு நுவரெலியா மாவட்ட சர்வமத அமைப்பு பொது மக்கள் இடையே துண்டு பிரசுரங்களை 04.02.2018 அன்று முதல் விநியோகித்து வருகின்றது.
எதிர்வரும் 10ம் திகதி நடைபெவுள்ள உள்ளுராட்சி தேர்தலினை முன்னிட்டு சர்வமத அமைப்பு ஜனநாயகதிற்காக எமது பங்களிப்பை செலுத்தி உள்ளுராட்சி மன்றங்களுக்கு சரியான நபர்களை தெரிவு செய்யுமாறும், பணத்திற்காகவோ அல்லது வேறு அற்ப சலுகைகளுக்காக தமது வாக்குகளை வீணாக்காது உண்மையான மனித நேயம் கொண்டவர்களை தெரிவு செய்யுமாறும் நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படும் வகையில் இந்த வாக்குகளை பயன்படுத்த கோரி இந்த அமைப்பு 04.02.2018 அன்று முதல் அட்டன் நகரத்தில் பஸ் தரிப்பு நிலையம், பொதுச் சந்தை ஆகியவற்றில் பொது மக்கள் இடையே துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றது.
நுவரெலியா மாவட்ட சர்மத அமைப்பை சேர்ந்த சுமார் 30 மேற்பட்ட குழுவினர் இந்த துண்டு பிரசுர விநியோகத்தில் ஈடுட்டனர்.
(க.கிஷாந்தன்)