மமாஃநுஃஹோல்புறுக் விஞ்ஞான கல்லூரி 95 மூ மான மாணவர்கள் சித்தி
இம்முறை வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் நுவரெலியா கல்வி வலயத்தின் ஹோல்புறுக் விஞ்ஞான கல்லூரியில் 95 சதவீதமான மாணவர்கள் க.பொ.த உயர் தரத்திற்கு தகுதிப் பெற்றுள்ளனர்.
இப்பாடசாலையில் பரீட்சைக்கு தோற்றிய புண்ணியமூர்த்தி தனுஜா 8A B, பீட்டர் மேவின் ரொட்ரிகோ 7A ,2B முருகராஜ் தர்ன் 6A, 2B, C ,கோபிகிருஸ்ணன் நிவேதிக்கா 6A, B ,2C , சிவானந்தன் துவாரகா 5A, 3B, C , ராமஜெயம் சிரோன்சன் 5A.2B,2C விஜயவீரன் கவிப்பிரியா 5A, 2B,2C ஆகிய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கு பெருமைசேர்த்துள்ளனர்.
மேலும் பரீட்சைக்கு தோற்றிய் அதிகமான மாணவர்கள் A தர சித்திகளை பெற்றுள்ளமை பாராட்டத்தக்கது.
கடந்த பல வருடங்களாக க.பொ.த சாதாரண தரத்திலும் உயர் தரத்திலும் இப் பாடசாலை சாதனைகளை புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப் பெறுபேற்றை பெறுவதற்கு காரணமாக இருந்து உழைத்த ஆசிரியர்களையும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும் இதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களையும் பாராட்டுவதாக பாடசாலையின் முதல்வர் திரு. முத்து ஜெயராமன் தெரிவித்தார்.
அக்கரப்பத்தனை நிருபர்