மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0
39

சிறுபோக பயிர்ச்செய்கை நிறைவடைந்து வரும் நிலையில், மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நாட்களில், பொருளாதார மையங்களுக்கு வரும் காய்கறிகளின் இருப்பு படிப்படியாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், மரக்கறிகளின் ஒரு கிலோகிராமிற்கான மொத்த விலைகள் பின்வருமாறு அதிகரித்துள்ளன.

போஞ்சி ரூ.350-370

கறிமிளகாய் ரூ. 480-550

கோவா ரூ.400

பச்சை மிளகாய் ரூ.330-380

பீர்க்கங்காய் ரூ.230

புடலங்காய் ரூ.220

பாகற்காய் ரூ.380

தக்காளி ரூ.180-210

வெள்ளரி ரூ.100

எனினும் மலையக மரக்கறிகளான கிழங்கு, கரட், முட்டைகோஸ், முள்ளங்கி போன்றவற்றின் மொத்த விலை 100 ரூபாவிற்கும் குறைவாக உள்ள போதிலும் அந்த மரக்கறிகள் சில்லறை விலையில் 200 முதல் 250 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த காலங்களில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விற்பனை விலை 2000 முதல் 3000 ரூபா வரை அதிகரித்துள்ள நிலையில், இன்றைய நாட்களில் ஒரு கிலோகிராமின் கரட்டின் மொத்த விலை 80 முதல் 100 ரூபாய் வரை குறைந்துள்ளது.ஆனால் ஒரு கிலோகிராம் கரட்டின் சில்லறை விலை 200 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here