மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

0
127

நாடு முழுவதும் காய்கறிகள் விலை அதிகரித்து வருகின்றநிலையில், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை குறைவடைந்துள்ளதாக பொருளாதார நிலைய வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை தற்போது கணிசமான அளவு வீழ்ச்சியடைந்து வருவதோடு, காய்கறிகளின் விற்பனையும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதன்படி, 350 முதல் 400 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்கப்பட்ட கத்திரிக்காய், 150 ரூபாயாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மலையகப் பகுதிகளில் இருந்து வரும் கேரட், வெண்டைக்காய், மிளகாய் போன்ற காய்கறிகளின் விலை 100 முதல் 200 ரூபா வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here