மரக்கறிகளின் விலை அதிகரிப்பால் பெரிதும் பாதிக்கப்படும் மலையக பகுதி மக்கள்

0
66

நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள வரி மற்றும் சீரற்ற காலநிலை உள்ளிட்ட காரணங்கள் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் என்றுமில்லாதவாறு உயர்ந்துள்ளது. இதனால் மிக சிரமத்திற்கு மத்தியில் வாழும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மரக்கறிகளின் விலைகள் வான் அளவு உயர்ந்து உள்ளதால் விலை கேட்டால் மயக்கம் ஏற்படுகிறது என தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ஹட்டன் உள்ளிட்ட மலையக பகுதிகளில் எந்த மரக்கறி கேட்டாலும் 250 கிராம் 150 ரூபா 200 ரூபா சொல்வதாகவும் பச்சை கொச்சிக்காய் தேசியக்காய் போன்றவை இரண்டாயிரம் ரூபாவினை எட்டியுள்ளதாகவும் இதனால் பெருந்ததோட்ட மக்கள் முதல் அனைத்து மக்களும்; பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

வருமானத்திலும் சம்பளத்திலும் எவ்வித மாற்றமும் ஏற்படாத நிலையில் நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்வதனால் மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர். மரக்கறி விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக மரக்கறி விற்பனையும் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

பலர் மரக்கறி விலையேற்றம் காரணமாக மீன் கோழி முட்டை தானியங்களை வாங்கி செல்கின்றனர் என்றும் இன்னும் சிலர் தெரிவிக்கின்றனர்.
எது எவ்வாறான போதிலும் மலையக பகுதியில் வாழும் மக்கள் பெரும் நெருக்கடிக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர். இதனால் அத்தியவசிய மற்றும் மரக்கறிகளின் விலையேற்றம் தாங்கிக்கொள்ள முடியாது ஒன்று என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here