நோட்டன் அட்டன் பிரதான வீதியில் மரமொன்று சரிந்து வீழ்ந்தமையினால் மூன்று மணித்தியாலங்கள் குறித்த வீதிக்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.நோட்டன் மல்லியப்பு மிட்போட் பகுதியிலே 20.05.2018 கா லை 5.30 மணிமுதல் போக்குவத்து தடைப்பட்டதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
பாதையோரமிருந்த வாகைமரமே இவ்வாறு பாதையின் குருக்கே சரிந்து வீழ்ந்ததாகவும் பிரதேச வாசிகளின் உதவியுடன் குறித்த மரம் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு 8.30 மணியளவில் போக்குவரத்து வழமைக்கு திருப்பியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் மேலும் அதிகாலைமுதல் அட்டன் லக்ஷபான. நோட்டன். கலவலதெனிய.
அங்கராம்பிட்டிய மாரக்க போக்குவரத்து தடைப்பட்டிருந்த நிலையில் மஸ்கெலியா நோட்டன்.மற்றும் தியகல வழியாக அட்டன் மாக்கத்தையும் பயண்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்