மரிக்கார் எஸ்.ராம்தாஸ்சின் மறைவு கலைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகும்! : அமைச்சர் இராதாகிருஸ்ணன் இரங்கல்

0
138

இலங்கையின் பலம் பெரும் நடிகரும் கோமாளிகள் புகழ் மரிக்கார் எஸ்.ராம்தாசின் மறைவு இலங்கை கலை உலகிற்கு ஒரு பேரிழப்பாகும்.  அவருடைய துணிச்சல் அவருடைய ஆளுமை திறமை என்பன அவருக்கு நிகர் அவரே அவரது துயரால் கலை உலகே கலங்கிப்போயிருக்கின்றது.

தமிழ் மற்றும் சிங்கள மேடை நாடகங்களிலும் திரைப்படங்களிலும் மிகவும் புகழ் பெற்று விளங்கியவர் மறைந்த மரிக்கார் எஸ்.ராம்தாஸ் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கோமாளிகள் புகழ் மரிக்கார் எஸ்.ராம்தாசின் மறைவு இலங்கை கலைத்துறையை பொறுத்தவரை ஒரு பாரிய இழப்பாகும்.

இலங்கையில் ஒரு காலத்தில் தென்னிந்திய திரைப்படங்களுக்கு நிகராக படங்களை தயாரித்து 100 நாட்கள் இலங்கை திரையரங்குகளில் ஓட்டி சாதனை படைத்தவர் மறைந்த மரிக்கார் எஸ்.ராம்தாஸ்.  குறிப்பாக அவருடைய நடிப்பில் வெளிவந்த வி.பி.கணேசன் எழுதி தயாரித்த நான் உங்கள் தோழன் அவருடைய சொந்த தயாரிப்பான கோமாளிகள் ஏமாளிகள் போன்ற திரைப்படங்களை இலங்கை ரசிகர்கள் இன்றும் மறக்கவில்லை.

மறைந்த மரிக்கார் எஸ்.ராம்தாஸ் வானொலி மேடை நாடகங்களில் பெரும் புகழ்பெற்று விளங்கிய ஒரு நடிகர்.

இந்திய வம்சாவளி தமிழரான நடிகர் ராமதாஸ் இலங்கை வானொலியில் தனக்கென ஒரு தனியிடத்தை பதித்திருந்தவர்.

வானொலி மூலமாக பல நாடகங்களை அரங்கேற்றியவர். மரிக்கார் எஸ்.ராம்தாஸ் என்றால் அவருக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது.  இன்று அவர் இலங்கையில் இருக்கின்ற பொழுது இறந்திருப்பாராக இருந்தால் இந்த ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் பாசமும் மரியாதையும் தெரியவந்திருக்கும்.  அவருடைய நடிப்புகள் இன்றும் எம் கண் முன் தெரிகின்றது.

வருடைய இழப்பு என்றுமே ஈடுசெய்ய முடியாத ஒரு இழப்பு எனவும் தனது அனுதாப செய்தியில் கல்வி இராஜாங்க வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

பா.திருஞானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here