மருதானையில் ரயில் தடம்புரள்வு – ரயில் சேவையில் தாமதம்

0
24

மருதானை ரயில் நிலையத்தில் இன்று(25) காலை எரிபொருள் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக மருதானை ரயில் நிலையத்தின் 1, 2 மற்றும் 3 ஆகிய புகையிரத தளங்களுக்கான சேவைகள் தடைப்பட்டுள்ளன.

மேலும் மருதானை ரயில் நிலையம் மற்றும் புறக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் தாமதத்துடன் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் ரயில் தடம் புரண்டுள்ளதன் காரணமாக புகையிரத நடைமேடையும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here