மருந்துகளின் விலையை குறைப்பதற்கான அணுகுமுறை ஒன்றை 3 மாதங்களுக்குள் தீர்மானிக்குமாறும் சுகாதார அமைச்சர் ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு கட்டளை இட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரச ஓளடதங்கள் கட்டுப்பாடு சபை மருந்துகளை சாதாரண விலையில் பெற்றுக்கொடுப்பதற்காகவே அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வர்த்தக சபையுடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும், 85 வீதமாக மருந்துகளின் விலையை குறைப்பதற்கு அவர்கள் இணங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளஅமைச்சர் இருப்பினும் விலை சூத்திரம் இன்னும் வழங்கப்படாதுள்ளதாகவும் ராஜித தெரிவித்துள்ளார்.