ஹல்துமுல்லை பட்டியதென்ன பகுதியில் மர்மமான முறையில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
கூரிய ஆயுதங்களில் உடலின் பல்வேறு பகுதிகளில் தாக்கப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
56 வயதுடைய ஊவாதென்ன மரக்கஹவெல்ல பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினர் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.