மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கு கிடைத்த வெற்றி

0
16

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000/- வேதனத்தை வழங்க மறுத்து கம்பனிகள் தாக்கல் செய்திருந்த வழக்கில், தொழிலாளர்கள் சார்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் முன்மொழியப்பட்ட 1000 ரூபாய் சம்பள கோரிக்கை தொழில் அமைச்சினால் ஆய்வு செய்யப்பட்டு, வர்த்தமானி ஊடாக வெளியிடப்பட்டது. இவ்வர்த்தமானிக்கு எதிராக பெருந்தோட்ட கம்பனியால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, தொடர் விசாரணைக்குப் பின் இவ்வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய வேதனத்தை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இவ்வுத்தரவு இலங்கை தொழிலாளர் காங்கிரஸிக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

எதிர்காலத்திலும் தொழிலாளர்களுக்கு அதிக சமபளத்தை பெற்றுத் தருவதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒருப்போதும் பின்வாங்காது. மேலும் தற்போதைய சூழ்நிலையில் வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல் 1000 ரூபாய் சம்பளம் என்பது போதுமானதல்ல எனவே மற்றுமொரு சம்பள உயர்வை நோக்கி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயற்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here