மலேசிய சிறைகளில் உள்ள இலங்கைக் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை! ; சாஹிட் ஹாமிடி

0
108

மலேசிய சிறைச்சாலைகளில் இருக்கும் 50 இலங்கைக் குடியுரிமை பெற்றவர்களை விடுவிக்க வேண்டும் என இலங்கை அரசு விடுத்துள்ள கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று, இலங்கை வந்துள்ள மலேசியாவின் உள்துறை அமைச்சரும் உதவி பிரதமருமான அஹமட் சாஹிட் ஹிமிடி தெரிவித்துள்ளார்.

இவர்களில் 38 பேர் சிறைச்சாலைகளில் வாடுவதாகவும், 12 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள சாஹிட், இவர்களில் பெரும்பாலோர், குடிநுழைவுச் சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டதாகவும், அனுமதிக்கப்பட்ட காலத்தை விட கூடுதலாகத் தங்கிய காரணத்திற்காக கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து 5,000 தோட்டத் தொழிலாளர்கள்

இலங்கையிலிருந்து 5,000 தோட்டத் தொழிலாளர்களை மலேசியத் தோட்டங்களில் பணிபுரிய தருவிப்பதற்கு சைம் டார்பி நிறுவனம் செய்துள்ள விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் சாஹிட் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here