உலக தொழிலாளர் தினத்தை வரவேற்கும் முகமாக மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் ஆண்டுதோறும் நடாத்தும் மேதின மற்றும் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா இம்மாதம் 22 ஆம் திகதி கொழும்பு செட்டியார்
தெருவில் இடம் பெறவுள்ளது.
இவ்விளையாட்டுப் போட்டியின் சிறப்பம்சம் பிரதம அதிதிகளாக இலங்கையின் தேசிய வீரர்கள் கலந்த சிறப்பிக்கின்றமையே ஆகும்.அந்தவகையில் இம்முறை இந்நிகழ்வில் இலங்கைக்கு வெள்ளி ஒலிம்பிக் பதக்கத்தை பெற்றுதந்த குறுநந்தூர ஓட்ட வீரங்கனை திருமதி சுசந்திகா அவர்கள் கலந்துக் கொள்ள உள்ளமை குறிப்பிடதக்கது.
கடந்த பன்னிரெண்டு ஆண்டு காலமாக மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் முன்னின்று சேவைகளை முன்னெடுத்துவரும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் தங்களது உறுப்பினர்களின் உந்து சக்தியுடன் செயற்பட்டு வருவது குறிப்பிடக்கது.
சித்திரை புது வருட விளையாட்டு போட்டியில் தலை நகரில் தொழில் புரியும் ஆயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் மன்ற அங்கத்தவர்கள் மற்றும் தொழில்தருணர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்க உ்ளனர் என மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் முத்துக்கண்னு சிவக்குமார் தெரிவித்தார்.
சிவா