கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையின் முத்தமிழ் கலாமன்றம் ஏற்பாடு செய்துள்ள “மலையக வரலாறும் வாழ்வியலும்” என்ற தொனிப்பொருளிலான கண்காட்சி, கல்லூரி வளாகத்தில் ஆரம்பமாகியது.
கல்வி அமைச்சின் தமிழ் பாடசாலைகளுக்கான அபிவிருத்தி குழுவின் பணிப்பாளர் சு.முரளிதரன் இக்கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து 28.11.2017 அன்றும், 29.11.2017 அன்றும் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சயில், மலையக மக்களின் அரசியல், கல்வி, பொருளாதார, வரலாறு தொடர்பான கிடைக்கத்தற்க அரிதான எழுத்து ஆவணங்கள் தொடர்பான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதன் ஆரம்ப வைபவத்தில் அட்டன் கல்வி வலயத்தின் உதவி கல்வி பணிப்பாளர் பி.ஈ.ஜீ.சுரேந்திரன், முன்னால் கொட்டகலை கலாசாலையின் அதிபர் ஜெயகுமார், மற்றும் கலாசாலையின் அதிபர், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(க.கிஷாந்தன்)