கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பின்னர் பொது தேர்தலிலும் மலையகத்தில் தேர்தல் பிரசாரங்களின்போது அதற்கு எதிராக செயற்பட்ட மகிந்தவின் ஆதரவாளர்கள், ஐதேக ஆட்சி அமைத்ததும் அதில் பங்கு கேட்க முற்படுகிறார்கள்.
ஆகவே கூட்டமைப்பினுடைய ஆறு உறுப்பினர்களா அல்லது இருவரா என அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என அமைச்சர் திகாம்பரம் அரசங்கத்திடம் கேள்வி எழுப்புவதாகவும் தெரிவித்தார்.
கொட்டகலை மேபில்ட் தோட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு புதிய வீடுகளை நிர்மானிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில் நல்லாட்சி அரசாங்கமானது பல்வேறு அபிவிருத்தி வேலைதிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது .
அந்தவகையில் மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சினூடாக தனிவீட்டுத்திட்ட எழுச்சி வேலைதிட்டத்தை முன்னெடுக்கின்றேன் தற்போது மகிந்தவுக்கு ஆதரவு தந்த மலையக அரசியல்வாதிகள் சிலர் தற்போது நல்லாட்சி அரசில் இணைய முனைகின்றார்கள் அவ்வாறு நடக்கும் சந்தர்பத்தில் தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் ஆறு உறுப்பினர்களும் எதிர்கால செயற்பாடு தொடர்பில் ஆலோசிக்க வேண்டி வரும் என தெரிவித்தார்
மேற்படி நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன் ஆர்.ராஜாராம், எம்.உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன் .