பரந்த மலையகத்தில் அனைத்து படசாலைகளிலும் கல்வி கற்கின்ற மாணவர்களும் எதிர் வரும் காலங்களில் இன்னும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுகாட்ட வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் பொதுச்செயலாளரும் .நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தெண்டமான் தெரிவித்தார் .
அட்டன் ஹைலன்ஸ் கல்லாரியில் 2017ம் ஆண்டு இடம் பெற்ற க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கொட்டகலை காங்ரஸ் தொழிநுற்ப கேட்போர் கூடத்தில் அண்மையில் சந்தித்து உரையாடிய போதே இதனை தெரிவித்தார் .
இந்த சந்திப்பின் போது இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் பொதுச்செயலாளரும்,நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மறுதபாண்டி ராமேஸ்வரன், இ.தொ.கா.வின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதிகனராஜ், முன்னால் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் அனுசியா சிவராஜா மற்றும் ஹைலன்ஸ் கல்லுரியின் அதிபர்ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மாணவர்கள் மத்தியில் தொடர்ந்தும் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமகன் தொண்டமான் கடந்த காலங்களை விட மலையகத்தில் உள்ள பாடசாலைகளில் அதிபர் ஆசிரியர்களினால் ஆற்றபடுகின்ற சிறந்த சேவையின் ஊடாக இன்று மலையக பாடசாலையினை சேர்ந்த மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினை பெற்று தமது பாடசாலைகளுக்கு பெறுமை தேடி தந்துள்ளார்கள்.
ஒரு மனிதனுடைய தலைஎழுத்தை நிர்ணயிக்க போவதும் ஒரு சமூகத்தின்னுடைய தலைஎழுத்தை நிர்ணயிக்க போவதும் பாடசாலை அதற்கு நல்லதொரு முன்னுதாரணமாகதான் அட்டன் ஹைலன்ஸ் கல்லாரியின் மாணவர்கள் இந்த பெறுபேறுகளை எடுத்து காட்டியிருக்கிறார்கள் .
இன்று அட்டன் ஹைலன்ஸ் கல்லுரி அண்மையில் 125வது ஆண்டு விழாவை கொண்டாடியது அதேபோல் மலையகத்தில் இன்று ஏனைய பாடசாலைகள் வெள்ளிவிழா, மற்றும் நுற்றாண்டு விழா, போன்றவையில் கால்பதித்து இருக்கிறது.
மலையகம் கல்வி துறையில் இன்று பாரிய வளர்ச்சியடைந்து காணபடுகிறது இன்று மலையகத்தில் இன்று வைத்தியர்கள், சட்டதரணிகள், பொறியியலாலாளர்கள் போன்றோர் உறுவாகியிருக்கிறார்கள் எனவே மலையகம் மேலும் கல்வி துறையில் வளர்ச்சிபெற மலையக பாடசாலைகளில் சேவையாற்றுகின்ற அதிபர்களும் ஆசிரியர்களும் மேலும் சிறந்த சேவையினை வழங்கவேண்டுமெனவும் கேட்டு கொண்டார்.
பொகலந்தலாவ நிருபர். எஸ்.சதீஸ்