“மலையகத்தில் உன் ஒவ்வொரு காலடியையும் கவனமாக எடுத்து வை ” அங்கே உன் உறவின் உடற்கூறு உள்ளே இருக்கலாம் ” வி. தேவராஜ் !

0
119

 

கனடா “மலையகா ” நூல் வெளியீட்டில் மலையக இலக்கியம் பற்றி சிறப்புரை வீரகேசரி ஆசிரியர்.

பாகம் (3)

“திண்ணை இலக்கிய மரபு”
இந்த இலக்கிய பாரம்பரியம் மலையகத்தின்புதிய சூழலுக்குள் பிரவாகித்தபோ து தமது பாரம்பரிய இலக்கிய
இதி காசங்களையும் காப்பாற்றிக் கொண்டனர்.
குறிப்பாக “இராமாயணம”; “மகாபாரதம்” போன்ற இதிகாசங்ளும் “ஆயிரம் தலை  வாங்கிய அபூர்வசிந்தாமணி” –
“இராஜா தேசிங்கு” – “அல்லி அரசாணிமாலை ” – “நளமகாரா ஜன்” – “அரிச்சந்தி ரன் வனவாசம”; – “மதுரைவீரன”; –
“கட்டபொம்மன்” – “நல்லதங்காள”; – “விக்கிரமாதித்தன”; முதலிய கதைகளும் “மதுரை வீ ன”; – “அரிச்சுனன்
தவசு” – “பொன்னர் சங்கர”; – “காமன் கூத்து” முதலிய கூத்துகளும் அவை சார்ந்த  பாடல்களும் இவை தவிர்ந்த
“தாலாட்டு” – “ஒப்பாரி ” – “மாரி யம்மன்” “தாலா ட்டு” போன்றவையும் அமைந்து  காணப்படுகின்றன. உண்மையில் இந்தப்
பாரம்பரிய இலக்கியங்கள் திண்ணை இலக்கியங்களாக பேணப்பட்டன என்று கூறுவதே பொருந்தும்.
மலையகத் தோட்டப் பகுதிகளில் மேற் கூறி ய இதிகாசங்களும் கதை களும் 1983 வரை திண்ணை இலக்கியங்களாக
தொ டர்ந்தன.
உண்மை யில் இந்த இதிகாசங்களையும் கதைகளையும் சிறு வயதிலேயே தோட்ட லயத்து திண்ணைப் பாரம்பரியத்துக்
கூடாகவே நான் கற்றுக் கொண்டேன் என்பதை இங்கு பதிவிட வி ரும்புகி ன்றேன்.
அதேபோல் சிறுவர்களை அமர்த்தி கதை கூறுதல் என்பது தோட்டங்களில் வழமையான  நிகழ்வுகளாகும். இந்த
நிகழ்வுகள் பெரும்பாலும் நிலாக்காலங்களில் நடைபெ றும். தோ ட்டத்து லயன் வாசல்களில் தாய்மார்கள்; ஒன்று கூடி
தமது பிள்ளைகளுக்குக் கதை கூறுவார்கள்.
தமிழக யாத்திரிகர்கள் வருகை .
ஆரம்ப காலங்களில் மலையகத்தில் வசதி படைத்தவர்களின் வீ டுகளுக்கு (பெ ரி ய கங்காணி செல்வந்தர்கள்)
தமிழகத்திலிருந்து சிலயாத்திரிகர்கள் கவிஞர்கள் புலவர்கள் வந்துபாடி பரிசு  பெற்றும் சென்றுள்ளனர்.
இவை குறித்து காலஞ்சென்ற கவிமணி சி . வி . வே லுப்பி ள்ளை பின்வருமாறு குறி ப்பிடுகின்றார்.
~~ இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தனிப்பட்ட துறையில் பாண்டித்தியம்  பெற்றவர்கள். பாரதம் இராமாயணம் பாடும்
புலவர்கள்; திருப்புகழ் கவிராயர் காவடிச்சிந்துப்பாடகர்கள் தியாகரா ஜர்  கீர்த்தனங்களை இசைக்கும் ங்கீத
வித்துவான்கள் ஆகியோர் தமது யாத்திரைக்காலங்களில் பெரிய வீடுகளுக்குச்  சென்று பாடி சன்மானம் பெற்றுப்
போவதுண்டு. இவர்கள் வருகை இலக்கிய உணர்வை வளர்த்தது. அந்த காலத்தில் சினிமா இல்லை . மலைநாட்டில்
ச ல முக்கிய பட்டினங்களில் நாடகங்கள் நடந்தன. “லங்கா தகனம”; “இராமாயணம்” “சத்தியவான்சாவித்திரி ”
ஆகிய நாடகங்கள் பிரசித்தி பெற்றவை .
இவ்வாறான சூழலில் மக்கள் குழுமியிருந்து அப்பாடல்களை இரசிப்பது இயல்பான ஒன்றாகும். இதன் காரணமாக
தென்னிந்தியத் தமிழ் கிராம பின்னணியை சார்ந்த நாட்டார் கதைப்பா டல்களி ன் தா க்கம் தொடர்ந்தும் இடம்
பெற்றன. இவை தவிர இம்மக்களின் மத வழிபா ட்டு நிகழ்வுகளின் போதும் ஏனைய சமுதாயம் சார்ந்த சடங்குகளின்
போதும் இப்பாடல்கள் பாடப்பெற்றன.
மலையக நாட்டார் பாடல்கள்.
மலையகத்தி ல் கிராமியப் பாடல்கள் மக்களின் மிகக் கடினமான உழை ப்பு மக்கள்  மீது திணிக்கப்பட்ட அடக்கு ஒடுக்கு முறைகள் மற்றும் அர்த்தம் எதுவும் இல்லாத வகையில் மேலிருந்தோர் ஈவிரக்கமற்ற முறை யி ல் மக்களை
நடத்திய விதம் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டிருந்தன.
மலை யக நாட்டார் பாடல்களின் தாயகமாக தென்னி ந்தியா இருந்த போதிலும் அவை மலையக
சூழ்நிலைக்கேற்றவகையில் புதி ய வடிவம் பெற்று விளங்குவதைக் காணலாம்.  எடுத்துக்காட்டாக பின்வரும்
பா டல்களை ஒப்பு நோக்கலாம்.

“ஏத்தமடி தேவி குளம்
எறக்கமடி மூணாறு
தூரமடி நைனக்காடு
தொடந்துவாடி நடந்து போவோ ம்..”
இப்பா டலி ல் இடம்பெறுகின்ற தேவி குளம் மூணா று நைனக்காடு ஆகியன  தென்னிந்தியாவில் காணப்பட்ட ஊர்
பெயர்களாகும். இப்பாடல் மலையக சூழலில் இவ்வாறு பரிமாணம் அடைந்து  காணப்படுகின்றது.
“ஏத்தமடி பெத்துராசி
ஏறக்கமடி ராசாத்தோட்டம்
தூரமடி தொப்பித் தோட்டம்
தொடந்து வாடி நடந்து போவோம்”
⦁ இப்பாடலில் இடம்பெறுகின்ற பெத்துராசி ராசாத் தோ ட்டம் தொப்பி த் தோ ட்டம் முதலிய சொற்கள் ஊர்
பெயர்களாகும். அவ்வகையில் நோக்குகின்ற போது மலையக நாட்டார் பாடல்களில் தென்னி ந்தியாவின் செல்வாக்கு
காணப்படுகின்ற அதே சமயம் அவை மலையக சூழலுக்குக்கேற்ப புதிய வடிவம் பெ ற்றிருப்பதனையும் காண
முடிகின்றது.
⦁ வறுமை வரட்சி சுரண்டல் சா தி அடிப்டையிலான அடக்கு முறைகள்; காரணமாக தென்னிந்தியாவிலிருந்து
புலம்பெயர்ந்து இங்கு வரும் போது அவர்களின் உணர்வுகள் இவ்வாறாக வெளி ப்படுகின்றது.
“வாடையடிக்குதடி
வடகாத்து வீசுதடி
செந்நெல் மணக்குதடி
சேர்ந்துவந்த கப்பலிலே ”
⦁ புகுந்த மண்ணில் ஏற்பட்ட ஏமாற்றம் சுரண்டல் அடக்கு முறைகள் என்பவற்றின்  காரணமாக அவர்களின்
வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கை ஏற்படுத்திய அனுபவம் காரணமாக தமது தாயகம் பற்றிய  ஏக்க உணர்வுகள் இவ்வாறு
பிரவாகம் கொள்கின்றது:
“ஊரான ஊரிழந்தேன்
ஒத்தப்பனை த் தோப்பிழந்தேன்
போரான கண்டியே
பெத்ததாயே நா மறந்தேன்”
——–
“பாதையில வீடிருக்க
பழனி சம்பா சோறிருக்க
எருமை தயிரிருக்க
ஏண்டி வந்தோம் கண்டி சீமை ”
———–
“கூனியடிச்சமலை
கோப்பி கண்டு போட்ட மலை
அண்ணனை தோத்த மலை
அந்தா தெரியுதடி”.

என்ற இப் பாடல் வரிகளை விபரிக்கும் போது மலையக பெரும் கவி சி .வி .வே லுப்பி ள்ளை
காடுகளை அழித்துப் புதிய மலைகளை உருவாக்கும் போது சாவு என்பது சர்வ சகஜமானது. மலையகத்தி ன்
ஒவ்வொரு மலைகளும் நிசசயம் சிரம் தாழ்த்தி மரியாதை செ லத்தத்தக்க யாரோ ஒரு தங்கையின் அண்ணனை த்
தோத்த மலை களாகதானிருக்கும்.
மலையகத்தின் மலைகளின் மீது உங்களுக்கு ஏறிடச் சந்தர்ப்பம் வாய்த்தால் உங்கள் காலடிகளைக் கவனமாய் எடுத்து
வையுங்கள். ஏனெனில் அவை அண்ணனைத் தோத்த மலைகள்||. எனக் கூறுவது மலையக மக்களின்
வாழ்நிலைகளை சிறப்பாகவே உணர்த்தி நிற்கின்றது என்று குறிப்பி ட்டுள்ளார்.
தோட்டங்களில் முறையா ன மயானங்கள் இன்றும் இல்லை .
அதே வேளையில் இன்றும் மலையகத்தில் பெரும்பாலா ன தோட்டங்களில் நிலை யா ன முறையான மயானங்கள்
இல்லை என்ற உண்மை வெளியில் கூறப்படுவதில்லை . இன்று மயானமாக இருப்பவை காலப்போக்கில் தேயிலை
மலைகளாக மாற்றப்படுகின்றன.
அதே வேளையில் பல தோட்டங்களில் தேயிலை மலைகளிலேயே இன்றும் தோ ட்டங்களில் இறந்தவர்களை அடக்கம்
செய்யும் மயானங்காளக விரிந்து கிடக்கின்றன.
எனவே “அண்ணனை த் தோத்த” மலையாக மலையக தோட்டங்களின் பெரும்பாலா ன பகுதிகள் இன்றும் உள்ளன.
மலையக மக்களின் வரலா று 200 வருடத்தை எட்டிய போதும் இன்றும் அந்த மக்கள் கூட்டத்தின் பெரும் பகுதியினர்
இறந்தவர்களை மரியா தையாக அடக்கம் செய்ய நிலம் இல்லை . அதாவது அந்த மக்கள் இருக்கும் போதும்
சொந்தமாக வாழ சொந்த நிலம் இல்லை . அதே மண்ணில் வீழ்ந்த பின்னும் அதே நி லைதான் உள்ளது.
அந்தவகையில் “மலையகத்தி ன் ஒவ்வொ ரு மலை களும் நிச்சயம் சிரம் தாழ்த்தி மரி யாதை செலுத்தத்தக்க யாரோ
ஒரு தங்கையி ன் அண்ணனை அல்லது தந்தை யை அல்லது தாயை அல்லது உறவுகளை “தோத்த”
மலைகளாகத்தான் இருக்கும் என்ற சி .வி .வே லுப்பி ள்ளை யி ன் வரி கள் இன்றும் உயி ர் வா ழ்ந்து கொ ண்டிருக்கி ன்றன.
இதுகுறி த்து சி .வி .வே லுப்பி ள்ளை யி ன் கவி தை கள் நி றை யவே பே சி யுள்ளன. அவருடை ய இரண்டு கவி தை களை
உங்கள் முன் வை க்கி ன்றே ன். சி .வி .வே லுப்பி ள்ளை யி ன் ஆங்கி லக் கவி தை களை தமி ழ் மொ ழி யி ல் தந்தவர் சக்தி
பா லை யா .
“புழுதிப் படுக்கையி ல்
புதைந்த என் மக்களை ப்
போற்றும் இரங்கற்
புகழ் மொழி இல்லை ;

பழுதிலா அவர்க்கோ ர்
கல்லறை இல்லை ;
பரிந்தவர் நினைவுநா ள்
பகருவார் இல்லை .

ஊணையும் உடலையும்
ஊட்டி இம்மண்ணை
உயிர்த்தவர்க்(கு) இங்கே
உளங்கசிந்தன்பும்

பூணுவாரில்லை – அவர்
புதைமேட்டிலோர் – கானகப்

பூவைப்பறி த்துப்
போடுவாரில்லையே .”

• இரண்டாவது கவிதை

“ஆழப்புதைந்த
தேயிலைச் செடியின்
அடியிற் புதைந்த
அப்பனின் சிதை மேல்

ஏழை மகனும்
ஏறிமிதித்து
இங்கெவர்வாழவோ
தன்னுயிர் தருவன்.

என்னே மனிதர்
இவரே இறந்தார்க்கு
இங்கோர் கல்லறை
எடுத்திலர்! வெட்கம்

தன்னை மறைக்கத்
தானோ அவ்விறை வனும்
தளிர் பசும் புல்லால்
தரை மறை த்தனனோ !”
⦁ மலையகம் சம்பந்தப்பட்ட மக்கள் இலக்கி யம் இவ்விலக்கியத்தி ன் அடியாக தோ ன்ற வேண்டியவையே .
சி .வி .வேலுப்பி ள்ளை என்.எஸ்.எம். இராமையா முதலானோ ரி ன் படைப்புகள் நா ட்டா ர் இலக்கியத்தின் மறு
பதிவுகளாக காணப்படுகின்றன எனக் கூறலா ம்.
மலையக நாட்டா ர் பாடல்களை நுண்ணியத்துடன் நோக்குகின்ற போது மலையக வா ழ்வியலை அடியாகக் கொண்டு
தோற்றம் பெற்ற முதல் இலக்கிய படை ப்புகளாக இவை அமைந்துகாணப்படுகி ன்றன என்பது ஆய்வாளர்களி ன்
கருத்தாகும்..
⦁ அதேவேளையில் வாய் மொழிப் பாடல்களில் எராளமான வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய பாடல்களை
மலை யகத்தி லேயே காண முடிகின்றதென்பதை சி .வி .வேலுப்பி ள்ளை ஏ.வி .பி .கோமஸ் சாரல்நா டன்ஆகியோரா ல்
எழுதப்பட்டுள்ள மலை நா ட்டு மக்கள் பா டல்கள் (1983) அங்கமெல்லாம் நெறஞ்ச மச்சா ன் (1988) மலையகவாய்
மொழி இலக்கியம் (1993) என்ற நூல்கள் மூலம் அறி ந்து கொ ள்ளலா ம்.
• “ஆரம்ப கால மலையக எழுத்து இலக்கியம்” மலையக மக்கள் மத்தியில் இருந்து எழவில்லை .
பெருந்தோட்ட பயிர்ச் செய்கையுடன் அழைத்து வரப்பட்ட பயிர்ச் செய்கையா ளர்களே இலங்க யி ல் ஒரு புதி ய
இலக்கிய தோற்றத்திற்குக் காரணமாயினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here