நேற்று மாலையில் இருந்து மலையகத்தில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக மலையகபகுதிகளில் உள்ள ஆறுகல் மற்றும் கால்வாய்கள் பெறுக்கெடுத்துள்ளது இதேவேலை நோர்வூட் மஸ்கெலியா பிரதான வீதி மற்றும் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதிகளில் ஆங்காங்கே மண் சரிவு எற்பட்டுள்ளது.இதேவேலை மலையகத்தில் பெய்த வரும் கடும் மழையின் காரணமாக கேசல்கமுவ ஓயா பெறுக்கடுத்துள்ளதுடன் காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்து காணபட்டுள்ளது .
இதேவேலை கொத்மலை நீர் தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டு திறக்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது
பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தோட்ட வீதி முழுமையாக வெள்ள நீரில் முழ்கியுள்ளமையால் கெர்க்கஸ்வோல்ட் தோட்டமக்களின் போக்கவரத்து முற்றாக பாதிக்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது
இதே நேரம் இன்றையதினம் கடும் மழையின் காரணமாக சில தோட்டபகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லவிலையென தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பொகவந்தலாவ கெம்பியன் மேற்பிரவு தோட்டபகுதியில் உள்ள லயன் குடியிருப்புகளுக்கு அருகாமையில் மண் சரிவு ஒன்று ஏற்பட்டள்ளது இதனால் குறித்த லயன் குடியிருப்பை சேர்ந்தவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என தெரிவிக்கபட்டுள்ளது
இதேநேரம் அட்டன் கொழும்பு அட்டன் நுவரெலியா ஆகிய வீதிகளின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ளும் சாரதிகள் மிக அவதானமாக வாகனத்தை செலுத்தபட வேண்டுமெனவும் பொலிஸார் அறிவுருத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்).