அட்டன், தலவாக்கலை பகுதிகளில் இன்று பிற்பகல் வேலையில் பெய்த கடும் மழையின் காரணமாக சில பகுதிகளில் நீரில் முழ்கியுள்ளதாக அட்டன்,தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் 26.04.2018. வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணியில் இருந்து பிற்பகல் இரண்டு மணிவரை கடுமையான மழை பெய்தமை குறிப்பிடதக்கது.
இதனால் அட்டன் பிரதேசத்திற்கு தமது அன்றாட தேவைகளை பூர்த்திசெய்து கொள்ள வந்த பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கபடுகிறது.
இதேவேலை அட்டன் பகுதியில் அதிக மழை காணபடுகின்றமையால் அட்டன் கொழும்பு பிரதான வீதி மற்றும் அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு அட்டன் பொலிஸார் கேட்டு கொண்டுள்ளனர்.
இன்று பிற்பகல் அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா மணிக்கவத்தை தோட்டபகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்ததில் மின்னல் தாக்கி இரண்டு ஆண் தொழிலாளர்கள் காயமடைந்து டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையின் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
எனவே மின்னல் தாக்கியதில் வைத்தியசாலையில் அனுமதிகபட்ட இரண்டு தொழிலாளர்கள் குறித்து எதுவும் கவலையடைய தேவையில்லையென டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார் .
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதிஸ்)