மலையகத்தில் வெய்யிற் காலநிலை நீடிப்பதனால் மரக்கறியில் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மரக்கறிவிவசாயிகள் தெரிவிக்கின்றனர். நுவரெலியா உள்ளிட்ட பல பகுதிகளில் மரக்கறி உற்பத்தி பாதிப்படைந்துள்ளதுடன் மரக்கறிகளுக்கான நீர் பாய்ச்சுவதில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நீர் நிலைகளில் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் வனப்பகுதிகளுக்கு தீ வைக்கப்பட்டுவதனால் நீர் நிலைகள் வற்றுவதுடன் டெவன் மற்றும் சென்கிளேயர் நீர் வீழ்ச்சியிலும் நீர் குறைவடைந்துள்ளதுடன் குடி நீர் தட்டுபாடும் ஏற்பட்டுள்ளது.
மேலும் மரக்கறி தொழிற்துறை பாதிப்படைந்துள்ள நிலையில் மரக்கறிகளின் விலை சடுதியாக குறைந்துள்ளமையினால் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக மரக்கறி,தோட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்