மலையகத்தில் கல்விக்குள் அரசியலை புகுத்த முற்படுவது நியாயமாகாது!

0
115

பன்விலை பகுதியில் வலயக் கல்வி பணிப்பாளராக இருந்த போதைக்கு புகழ்போன ராஜாவை அங்கிருந்து இடமாற்றம் செய்துள்ளார்களாம், கருடனுக்கு அவரது சித்து விளையாட்டுகள் தொடர்பில் தொடர்ச்சியாக வந்த புகார் கடிதங்களை அப்படியே அதை பிரசுரித்தோம், என்பதை வாசகர்கள் அறிவார்கள், கல்வியை அரசிலாக்கி அவர் போட்ட ஆட்டங்கள் அநேகம், தற்போது அவருக்கு கிடைத்திருக்கும் இந்த இடமாற்றம் அவரை சிந்திக்க தூண்டியிருக்க வேண்டும், கல்வியை புகட்ட வந்தவர்கள் தாம் ஏற்றுக்கொண்ட அந்த புனிதமான பணியை செய்ய கடமைப்பட்டவர்கள், இதேவேளை அட்டன் கல்வி வலயத்தில் ஒருவரும் ஒரு கட்சிக்கு சேவை செய்வதிலேயே குறியாக இருக்கிறாராம் அவர் தொடர்பிலும் விபரங்கள் கசிந்துள்ளது, எனவே தான் பொறுப்பேற்ற சேவைக்கு களங்கம் ஏற்படுத்தாமல் அவர் இருந்து கொண்டால் எல்லோருக்கும் நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here