பாடசாலையை அன்பு செய்யுங்கள். மாணவர் சமூகத்தின் கௌரவத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்
கபொத பரீட்சையில் பங்கெடுக்கும் மாணவர்களுக்கு பிரிடோ சிறுவர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது
ஆகஸ்டு எட்டாம் திகதி க.பொ.த உயர்தர பரீட்சை ஆரம்பமாகிறது. மலையக சமூகத்தின் உயர்வு கல்வியில் தங்கியருப்பதால் இந்த பரீட்சை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த பின்னனியில் பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மூத்த சகோதர சகோதரிகளுக்கு பரீட்சைக்கு சிறப்பான முறையில் முகம் கொடுக்க பிரிடோ நிறுவன நுவரெலியா மாவட்ட சிறுவர் கழகம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு அவர்களுக்காக இறைவனை பிராத்திக்கிறது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பில் உள்ள புலம் பெயர் அபிவிருத்திப் பங்காளர் குடும்பங்களில் உள்ள பரிட்சாத்திகளின் தாய் அல்லது தந்தை அவர்களை நேரடியாக வாழ்த்த இங்கு இல்;லாத நிலையில் அவர்களுக்கு சிறுவர் கழக வலையமைபை;பு விசேட வாழத்துக்களை தெரிவித்திக்கொள்வதோடு அவர்களின் பெற்றார்கள் நாட்டின் அபிவிருத்திக்கும் குடும்பங்களின் அபிவிருத்திக்கு செய்யும் பங்களிப்பை நன்றியோடு நினைவு கூறி அவர்களை உற்சாகப்படுத்த விரும்புகிறது.
இதே வேளையில் அனைத்து பரிட்சார்த்திகளிடம் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறது. பரீட்சை முடிவின் போது தமது கல்வி வாழ்க்கை முடிந்துவிட்டதாக கருதி பாடசாலை தளபாடங்களுக்கு அல்லது தங்களது உடைகளுக்கு பலவித வர்ணங்களை அடித்து சேதம் விளைவிக்கும் வழக்கம் கடந்த காலத்தில் காணப்பட்டாலும் , தற்போது அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இது ஒரு நல்ல முன்னேற்றமே.
ஆயினும் தற்போது பாடசாலைக்கு சேதம் விளைவிக்கும் நடவடிக்கை இடம் பெறாததற்கு பாடசாலைகளில் போலிஸாரின் பாதுகாப்பு இருப்பதுவே காரணம் என சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். “நான் படித்த பாடசாலை , எனது சமூகத்தை எதிர்காலத்தில் கல்வியில் உயர உதவும் பாடசாலை, எனவே அதனை பாதுகாக்க வேண்டும்,
அதற்காக நான் நன்றி உள்ளவனாக இருக்க வேண்டும”; என்ற உணர்வு நமக்கு இருக்குமானால் போலிஸ் பாதுகாப்பு தேவையில்லை. இந்த பின்னனியில் அனைவரும் மாணவர் சமூகத்pன் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என நமது மூத்த சகோதர சகோதரிகளுக்கு சிறுவர் கழக வலையமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.
இறுதியாக நமது சமூகத்தின் உயர்வுக்கு உள்ள ஒரே வழியும் ஏணியும் கல்வி முன்னேற்றமே; என்பதால் இம்முறை பரிட்சை எழுதும் மூத்த சகோதர சகோதரிகள் மட்டுமல்ல மாணவ மாணவிகள் அனைவருமே; தமது கல்வி நடவடிக்கைகளில் அதிக அக்ககறை செலுத்த வேண்டும் எனவும், பாடசாலை விடுமுறை நாட்களை உச்ச கட்ட பயனுள்ள முறையில் கல்வி அபிவிருத்திக்காக பயன்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கிறது.
கபொத உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சகல பரீட்சாத்திகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரிடோ நுவரெலியா மாவட்ட சிறுவர் கழக பிரதிநிதிகளாக செல்வன் அ. அனுசான் செல்வி.ஜீ. சிந்துஜா ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அக்கரப்பத்தனை நிருபர்.