மலையகத்தில் சீரற்ற காலநிலை- வாகனசாரதிகளுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ள பொலிஸ்!!

0
109

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை யினை தொடர்ந்து இன்று முற்பகல் இரண்டு மணியில் இருந்து கடும் மழையுடனான காலநிலை ஏற்பட்டுள்ளது

அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி, கலுகல, பிட்டவல கினிகத்தேனை கடவல, தியகல, வட்டவளை, அட்டன் ஆகிய பிரதேசங்களில் அடிக்கடி பனி மூட்டம் சூழ்ந்து கொள்வதனால் இப்பாதையினை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக பிரயாணம் செய்வதன் மூலமும் வாகனங்களை செலுத்துவதன் மூலமும் விபத்துக்களை தவிர்த்துக்கொள்ளலாம் என  பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே மண் திட்டுகளுக்கு அருகாமையில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here