மலையகத்தில் நடைபெறும் தேசிய பொங்கல் விழா திகதி மாற்றம்…!

0
28

தேசிய பொங்கல் விழா ஜனவரி 20 ஆம் திகதி நடத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் தற்போது அதனை ஜனவரி 21 நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் , ஹட்டன் டன்பார்க் மைதானத்தில் தேசிய பொங்கல் விழா மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

மைதான வளாகத்தில் பரீட்சை நிலையமொன்று இருப்பதால், உயர்தர மாணவர்களின் நலனைக்கருத்திற்கொண்டு 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விழாவை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளனர்.கலை, கலாசார நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்தும் பிரமுகர்கள் வருகை தரவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here