தலவாக்கலை ஸ்டேலின் பொது மைதானத்தில் சனிக்கிழமை கோலகளமாக ஆரம்பிக்கப்பட்ட அணிக்கு ஏழு பேர் பங்கு கொள்ளும் மென்பந்து கிரிக்கெட் போட்டியில் அறுபத்து நான்கு அணிகள் பங்கு பற்றின.மலையகத்திலிருந்து பல பாகங்களிலிருந்து வருகை தந்த அணிகள் வெற்றி கிண்ணத்தை வெல்லுவதற்கு பலத்த பலப்பரீட்சையில் ஈடுபட்டது.
பார்மா நலன்புரி ஒன்றியத்தினால் மிகப்பிரமாண்டமான முறையில் கிரிக்கெட் போட்டிகள் ஐபிலுக்கு இணையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஊடக அனுசரணையை வானலைகளின் வல்லரசன் வர்ணம் எப் எம் வழங்கியது.அத்தோடு அச்சி ஊடக அனுசரணையை சூரியகாந்தியும் மெட்ரோ நியூஸ் ஆகியன வழங்கியமை சிறப்பம்சமாகும்.
ஒவ்வொரு போட்டி முடிவில் சூப்பர் சிக்சருக்கு கிண்ணங்களும் ஹெட்ரிக் பந்துவீச்சாளர்களுக்கு பார்மா தொப்பியும் வழங்கி வைக்கப்பட்டது.
இம்முறை செம்பியன் கிண்ணத்தை பத்தனை நிவ் செலன்ஜர்ஸ் அணி தன்வசமாக்கிக் கொண்டது.
மும்மொழிகளிலும் வருணனை வழங்கி இளைஞர்களிடையே கனவான்களின் விளையாட்டை முறையான முறையில் ஒழுங்கமைப்பு வைத்த பார்மா அமைப்பின் தலைவர் ஜெகன் செயலாளர் லோரன்ஷ் பொருளாலர் சிவா மற்றும் ரொபின், இணைப்பாளர் சங்கர் , லோகேஸ் பதிவாளர் யோகா வருணனையாளர்கள் யசந்த் , கிருஷ்ணா ,கருணா ,ஷான் ,அனைத்து அங்கத்தவர்களுக்கும் சொமி சிக்ஸ் விளையாட்டு கழகத்திற்கும் ரியல் மெட்றிக் கழகத்திற்கும் எமது நன்றிகளும் நல்வாழ்த்துகளும்……