13 ம் திகதி அன்று முதல் தொடர்ச்சியாக காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்றது.
இன்று மாலை வேளையில் பெய்த கடும் மழையினால் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவூக்குட்பட்ட டொரிங்டன் தோட்ட பகுதியில் உள்ள ஆற்று நீர் பெருக்கெடுத்ததால் அப்பகுதியில் விவசாய காணிகள் நீரினால் மூழ்கியதுடன் விவசாய காணிகளில் பயிரிடப்பட்டியிருந்த மரகறிவகைகள் அனைத்தும் வெள்ளத்தினால் அடித்துச்செல்லப்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை பெருந்தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள் பல சிரமங்களை இன்றைய தினம் எதிர்நோக்கிய தாக தொழிலாளகள் தெரிவிக்கின்றனர்.
டயகம நகரத்திலிருந்து போடைஸ் வழியாக அட்டன் செல்லும் பிரதான பாதையில் உள்ள மண்மேடுகளில் இருந்து கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால் அப்பாதையின் ஊடாக பயணிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் வாகனசாரதிகள் வாகனத்தினை அவதானமாக செலுத்துமாறு அக்கரப்பத்தனை பொலிஸார் கோரியூள்ளனர்.
அத்தோடு நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவூ ஏற்பட கூடிய இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் மிகவூம் அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட இயற்கை அனர்த்த மத்திய நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அக்கரப்பத்தனை நிருபர்.