மலையகத்தில் பேதமின்றி மக்கள் சேவை தொடர்கின்றது : ஸ்ரீதரன் தெரிவிப்பு!

0
110
தொழிற்சங்க அரசியல் பேதமின்றிய மக்கள் சேவை மலையகத்தில் தற்போது தான் முன்னெடுக்கப்படுகின்றன என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப 5 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் பொகவந்தலாவை ஓல்டி கீழ்ப்பிரிவு தோட்டத்தில் செப்பனிடப்பட்ட பாதையைத் திறந்து வைத்துப் பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் கெம்பியன் பிரதேச  அமைப்பாளர் லோகநாதன் தலைமையில் இடம் பெற்ற இந்தப்பாதைத்திறப்பு நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின்  நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர்களான பா.சிவநேசன் , பி.கல்யாணகுமார் , பொகவந்தலாவை பிரதேச அமைப்பாளர் செல்வராஜ் , மாவட்டத்தலைவர் ரகு , தோட்டத்தலைவர் துரைராஜ் , தோட்டத்தலைவி செல்வமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது ..
அமைச்சர் திகாம்பரம் தனது அமைச்சின் ஊடாக தோட்டப்பகுதிகளில் எவ்விதமான பாராபட்சமுமின்றி அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
தோட்டப்பகுதிகளில் முன்னொருபோதுமில்லாத அபிவிருத்தி திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஓல்டி கீழ்ப்பிரிவு தோட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாக பல சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் ஊடாக இந்தத் தோட்டத்தில் விளையாட்டு மைதானமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப ஓல்டி தமிழ் பாடசாலைக்கு கட்டிடமொன்றை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட 3 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டுக்கு மேலாக இவ்வருடமும் 5 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்தத் தோட்டத்தில் விரைவில் வீடமைப்புத்திட்டமொன்றையும் முன்னேடுக்கவுள்ளோம்.
இவ்வாறான வேலைத்திட்டங்களின் ஊடாக தொழிற்சங்க அரசியல் பேதங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம். எனவே இவற்றை எமது மக்கள் நன்று உணர்ந்து கொள்ள வேண்டும்.
பாெகவந்தலாவ நிருபர் எஸ். சதீஸ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here