மலையகத்தில் போதை தரும் புகையிலை எங்கிருந்து வருகிறது? கருடனின்” புலனாய்வு!

0
114

அண்மை காலமாக மலையகத்தில் பரவலாக பொலிஸாரினால் கைப்பற்றப்படும், புகையிலைத்தூள், என்சி மூக்குப்பொடி, பாபுல் பாக்கு, பான்பராக் என்பன எங்கிருந்து வருகின்றன யாரால் மலையக பிரதேசங்களுக்கு கொண்டு வந்து சந்தைப்படுத்தப்படுகிறது என்ற விடயத்தை அறிந்து கொள்ள கருடன் மிகவும் கரிசனையுடன் இருந்தது, இதை பலர் மலையக அரசியல்வாதிகளின் பின்னணி என்ற ஒரு விடயத்தை முன் வைத்திருந்தார்கள், கருடனின் புலனாய்வில் பல்வேறு விடயங்கள் தெரிய வந்துள்ளன.

DSC07685

கடந்த இரண்டு வருடத்துக்கு முன்னர் இந்த புகையிலை மற்றும் பாக்கு வகைகள் சர்வசாதாரணமாக மலையக பகுதிகளில் புழக்கத்தில் இருந்து வந்துள்ளன, முன்னர் இந்த புகையிலை தூள்களை வாங்கி சந்தைப்படுத்துவதில் பொகவந்தலாவையில் ஒரு அரசியல் பிரமுகரும் செயற்பட்டார் எனவும் இப்போது அவர் அதில் சமபந்தப்படவில்லை என தெரிய வந்துள்ளது, இவற்றை இப்போது கொள்வனவு செய்து சந்தைப்படுத்துபவர்கள் தமிழ் வியாபாரிகள் என்பது புலனாகியுள்ளது, பொகவந்தலாவ, நோர்வூட் மற்றும் தலவாக்கலையில் இவர்கள் மொத்த வியாபாரிகளாக இருக்கிறார்கள்.

யார் இவர்களுக்கு விநியோகம் செய்கின்றனர்?

03

கொழும்பை மையமாக கொண்ட முஸ்லீம் வியாபாரிகளே இதன் பின்னணியில் இருக்கிறார்கள் இதில் பிரதானமானவர் அலிபாய் இவரின் தலைமையில் இந்த புகையிலை தூள் மற்றும் பாபுல் பாக்கு, அலிபாய் பீடா, என்சி மூக்குப்பொடி என தயாரிக்கப்படுகிறது, கொழும்பு மத்தியப்பகுதியில் செக்கட்டித்தெருவுக்கு அருகாமையில் லங்கா லொட்ஜ் அருகில் உள்ள ஒரு கடையின் கீழ் அறையில் இவை ரகசியமாக பொதி செய்யப்படுகின்றன.

இதைவிட கொழும்பு பேரடைஸ் பார்க் பகுதியில் மற்றோர் முஸ்லீம் வியாபாரி ஊடாகவும் இது மலையக பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது, இந்த போதை தரும் புகையிலை மலையகத்தில் மட்டுமல்ல கொழும்பில் அடிமட்ட மக்களிடம் புழக்கத்தில் உள்ளது. கொழும்பு பகுதியில் வீதி அதிகாரசபையின் கீழ் வீதி அபிவிருத்தி வேலைகளில் ஈடுபடும் மலையகம் சார்ந்த இளைஞர்களிடம் இது தாராளமாக புழக்கத்தில் உள்ளது.

கொழும்பில் உற்பத்தி செய்யப்படும் இந்த போதை தரும் வஸ்துக்கள் உடனடியாக விற்பனை செய்யப்படுகிறது, மலையக பகுதி வியாபாரிகளுக்கு கடன் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது, சுமார் ஐந்து லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

கொழும்பிலிருந்து மலையகத்துக்கு கடத்தப்படுவது எப்படி?

05-1

மலையகப்பகுதிகளுக்கு கொழும்பிலிருந்து உணவுப்பொதிகளை கொண்டு வரும் வாகனங்களில் மிகவும் ரகசியமாக கொண்டு வரப்படுகிறது, அதைவிட இந்த வியாபாரிகளின் வேலையாட்கள் மிகவும் ரகசியமாக இதை அட்டன் பகுதிக்கு கொண்டு வந்து விநியோகம் செய்து விடுகின்றனர், கடந்த வருடம் இந்த அலிபாய் கினிகத்தேன பகுதியில் மாட்டிக்கொண்டார் எனவும் தனது பண பலத்தை வைத்து தப்பித்து கொண்டார் எனவும் தெரிய வருகிறது.

இந்த போயிலைத்தூளில் என்ன போதை உள்ளது?

இந்த தூளை சிலர் மூக்குப்பொடியாக பயன்படுத்துகின்றனர் பெரும்பாலோனோர் வாய் இடுக்கில் இதை வைத்துக்கொள்ளும்போது சுமாரான போதை அவர்களுக்கு அதில் கிடைக்கிறது, குறைந்த விலையில் போதைதரும் ஒரு பொருளாக அதை கொள்வனவு செய்கிறார்கள், அடிமட்ட மக்கள் மத்தியில் இது புழக்கத்தில் இருப்பதை மலையக பகுதிகளில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த போதைதரும் புகையிலைத்தூள் மற்றும் பாபுல் பாக்கு போன்றவற்றை தடை பாரிய வேலைத்திட்டம் வேண்டும் மலையக பகுதிகளில் உள்ள தமிழ் வியாபாரிகள் நல்லெண்ணம் கொண்டு சமூகப்பார்வையுடன் செயற்பட்டால் மட்டுமே இதை தடுக்க முடியும் இல்லையெனில் இது தொடர்கதையாகவே இருக்கும், இது விடயத்தில் கருடனின் புலனாய்வு தொடரும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here