மலையகத்தில் மாணவர்கள் சிறந்த கல்வியினை பெறுவதன் மூலமே சமூகத்தில் நல்ல பயனுள்ள மனிதர்களாக மாற்றம் பெற முடியுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளரும் சர்வதேச இசைக் கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைத் தூதுவரும்,அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவருமான அதிவண பிதா அருட்கலாநிதி எஸ். சந்ரு பெர்னாண்டோ தெரிவித்தார்.
மலையக மாணவர்களின் கல்வி மேம்பாட்டு கருதி மாணவர்களின் பயன்பாட்டிற்காக போட்டோ பிரதி இயந்திரம் மற்றும் புத்தக பைகள் வழங்கும் நிகழ்வு ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் குயில்வத்தை தமிழ் மாகா வித்தியாலயத்தில் கல்லூரியின் அதிபர் எம். வேல்முருகன் தலைமையில் இன்று (27) திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்;ந்து கருத்து தெரிவிக்கையில்,
நான் இந்த இடத்தில் பேசுவதற்கு காரணம் நான் உங்களை போன்று சிறந்த முறையில் கல்வி கற்றதனால் தான் ஆகவே இவ்வாறு பலர் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் கல்வி மேம்பாட்டுக்காக பல உதவிகளை செய்து வருகிறோம.; அதனை பெற்று நீங்களும் இந்த சமூகத்திற்கு பயனுள்ள மனிதர்களாக மாற வேண்டும் இன்று கடுமையான பாதைகளை கடந்து வந்தவர்கள் தான் உலகில் பல சாதனைகளை படைத்துள்ளனர். மலையகத்தில் இன்று கலை பட்டதாரிகள் அதிகமாக உள்ளனர.; அதனை இட்டு நாங்கள் சந்தோசமடையும் அதே வேளை எதிர் காலத்தில் சமூகத்தில் மாற்றத்தினை ஏறபடுத்தக்கூடிய அரசியல் பொருளாதார துறைகளில் நாம் விருத்தி காண வேண்டும்.இன்றை சூழ் நிலையில் தொழிட்பத்தினுடாக நாம் வர்த்தக துறையில் தேடி நுழைய வேண்டும்.அப்போது தான் எம்மை நாம் உயர்த்திக்கொள்ள முடியும்.ஹட்டன் பகுதியில் பல பிரபல பாடசாலைகள் பொறியியலாளர்கள் மருத்துவர்கள் போன்ற துறைகளுக்கு மாணவர்களை அனுப்பி வைத்த போதிலும். முழு மலையகத்தினை பொருத்த மட்டில் அது போதுமானதாக அல்ல ஆகவே நீங்கள் எங்களுக்கு செய்யும் உதவி சிறந்த முறையில் கல்வியினை பெற்று இந்த சமூகத்தினை மாற்றம் கூடிய வல்லமை உள்ளவர்களாக மாற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்;.
இதன் போது மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில், ஹட்டன் பிரதேச பொலிஸ் அதிகாரி, வேர்ல்ட் விஷன் ஸ்ரீ லங்காவின் செயற்றிட்ட முகாமையாளர் மனோஜ் ஜூட் தவராஜா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், ஹட்டன் ஹைலன்ஸ் தேசிய பாடசாலையின் ஆசிரியர்களான டீ. ஜஸ்டீன் செல்வகுமார், என்.முருகானந்தன் மற்றும் மத விவகாரங்களுக்கான செயலாளரின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் ஏ.டீ. முரளி, நோர்வூட் பிரதேசத்தின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.நிசாரியேஸ் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
க.கிஷாந்தன்