தலவாக்கலை தோட்டம் நானுஓயா பிரிவில் 28.03.2018 அன்று மாலை கடும் காற்றுடன் கூடிய பெய்த அடை மழையினால் குடியிருப்புக்களின் கூரைத் தகடுகள் அள்ளூண்டு போய்யுள்ளதுடன், சுமார் 50 க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதே வேளை மரமொன்று வீடொன்றின் மீது முறிந்து விழுந்ததினால் அவ்வீடும் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த வீடுகளில் மழை நீர் வழிந்தோடியதால் வீடுகளில் இருந்த உடமைகள், பாடசாலை மாணவர்களின் உபகரணங்கள் சேதமாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட 15 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50ற்கும் மேற்பட்டோர்களுக்கு நிவாரணங்களை வழங்க தோட்டநிர்வாகம், மற்றும் பொதுமக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
க.கிஷாந்தன்